பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
தனுஷை நடிகராக உருவாக்கிய அவரது அண்ணனான டைரக்டர் செல்வராகவன், தொடர்ந்து இயக்குனராகவே வலம் வந்தார். தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானதை அடுத்து, சாணிக்காயிதம் படத்தில் தான் நடித்த சில போட்டோக்களை வெளியிட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தற்போது செல்வராகவன் மிரட்டலாக அமர்ந்திருக்கும் ஒரு அதிரடியான போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட் டோவில் ஒரு முழுமையான நடிகராக செல்வராகவன் தன்னை வெளிப்படுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
மேலும், இந்த சாணிக்காயிதம் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை ஆகஸ்டு 20-ந்தேதியில் இருந்து செல்வராகவன் தொடங்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.