நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் மேயாதமான் என்ற படத்தில் வைபவிற்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். தற்போது கசடதபற, ருத்ரன், குருதியாட்டம், ஹாஸ்டல், பத்துதல, பொம்மை உள்பட பத்து படங்கள் வரை நடிக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் பிரியா பவானிசங்கர் நடிக்கப்போவதாக ஒரு செய்தி வெளியானது. அதையடுத்து தற்போது மாறன் படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் ராஷி கண்ணாவுடன் இணைந்து இரண்டு நாயகிகளின் ஒருவராக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகி உள்ளது. அதோடு தங்கமகன் படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.