சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள குஷ்பு, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கோகுலத்தில் சீதை தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, சின்னத்திரையிலும் கால்பதித்து குங்குமம், கல்கி உள்ளிட்ட பல தொடர்களில் வரிசையாக நடித்தார். இடையில் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கிய குஷ்பு சின்னத்திரைக்கு இடைவெளி விட்டிருந்தார்.
தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' நாடகத்தில் நடிக்க உள்ளார். பொறுப்புள்ள, தைரியமான பெண்ணாக மங்களம் டாக்டர் கதாபத்திரத்தில் குஷ்பு நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் வரவிருக்கும் எபிசோடுகளில் பல ட்விஸ்டுகளை தர உள்ளது.
மங்களமாக குஷ்புவின் நடிப்பை பார்க்கவும், அவரால் கதையில் ஏற்படும் திருப்பங்களை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.