பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படம் தான் நரகாசூரன்.. அரவிந்த்சாமி, சந்தீப், இந்திரஜித் என முக்கிய ஹீரோக்கள் இதில் நடித்துள்ள இந்தப்படம் கடந்த நான்கு வருடங்களாக ரிலீஸாக முடியாமல் தவித்து வருகிறது. இந்தப்படத்தை இணைந்து தயாரித்த இயக்குனர் கவுதம் மேனன் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கியிருந்ததால் அதன் காரணமாக இந்தப்படத்தை வெளியிட முடியாமல் சிக்கல் நீடித்தது.
இந்தநிலையில் ஒடிடி தளத்தில் இந்தப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக ஆகஸ்ட்-13ல் இந்தப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போதும் கூட பைனான்சியர்களிடம் இருந்து இந்தப்படத்திற்கான செட்டில்மென்ட்டை முடித்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அதனால் ஆக-13ல் நரகாசூரன் வெளியாவது சந்தேகம் தான் என்றும் சொல்லப்படுகிறது.