தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் |
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை என்ற இரண்டு படங்களையும் எச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் 61ஆவது படத்தையும் எச்.வினோத் இயக்க போனி கபூரே தயாரிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அஜித்தின் அடுத்த படத்தையும் மூன்றாவது முறையாக எச்.வினோத்தே இயக்க, ஏற்கனவே அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் அதைத் தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தையும் தயாரிக்கிறது. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.