என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழில் ஹிட்டான படங்களை தெலுங்கிலும் தெலுங்கில் ஹிட்டான படங்களை தமிழிலும் ரீமேக் செய்து வெற்றி பெறுவது தொடர்ந்து வரும் நிகழ்வுதான். அதேசமயம் தெலுங்கில் இளம் நடிகராக இருந்த ஜூனியர் என்டிஆர் நடித்து வெற்றிபெற்ற சிம்மாத்ரி போன்ற படத்தை, இங்கே அவரைவிட இரட்டிப்பு வயது கொண்ட விஜயகாந்த் போன்ற சீனியர் நடிகர் நடிப்பில் கஜேந்திராவாக வெளிவந்தபோது பிளாப் ஆன நிகழ்வுகளும் உண்டு.
அப்படித்தான் 2007ல் வெங்கடேஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் ஹிட்டான ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேறுலே படத்தை, அப்போது இளம் நடிகராக இருந்த தனுஷை வைத்து யாரடி நீ மோகினி என ரீமேக் செய்தனர். சீனியர் நடித்த கதை ஜூனியருக்கு பொருந்துமா என்கிற சந்தேகம் எழுந்த நிலையில், தனுசுக்கு அந்த கதாபாத்திரம் சரியாக பொருந்தி படமும் சூப்பர் ஹிட்டானது. தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் படங்களில் அதுவும் ஒன்றாகி போனது.
இந்த நிலையில்தான் கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து இங்கே தனுஷ் நடிப்பில் ஹிட்டான அசுரன் படத்தை தற்போது அதே வெங்கடேஷ் நரப்பா என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. ஓடிடியில் இந்த படத்தை வெளியிடலாம் என ஒருபக்கம் தயாரிப்பாளர்கள் நினைத்தாலும், வெங்கடேஷ் ரசிகர்களின் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருப்பதால் தியேட்டரில் வெளியிடும் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் வந்துள்ளனராம்.
அதற்கேற்ற மாதிரி வெகுவிரைவில் தியேட்டர்களும் திறக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் எப்படி வெங்கடேஷ் படத்தை தான் ரீமேக் செய்து நடித்து, அதனால் மிகப்பெரிய வெற்றியை பெற்றோமோ, அதேபோல தன்னுடைய படத்தை தற்போது ரீமேக் செய்து நடித்திருக்கும் வெங்கடேஷுக்கும் அதேபோன்ற வெற்றி கிடைக்க வேண்டுமென, தனுஷ் நரப்பாவின் ரிலீஸ் தேதியை ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்க்கிறாராம். 13 வருடத்திற்கு பிறகும் அந்த மேஜிக் நடக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.