2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? |

ஏற்கனவே தனுஷை வைத்து ‛கர்ணன்' என்ற படத்தை  இயக்கிய மாரி செல்வராஜ், அடுத்து தனுஷின் 56வது படத்தை  இயக்கப்போகிறார். ‛பைசன்' திரைக்கு வந்ததை அடுத்து தற்போது அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளை தொடங்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். மேலும், இட்லி கடை படத்தை அடுத்து விக்னேஷ் ராஜா இயக்கும் தனது 54வது படத்தின் தற்போது நடித்து  வருகின்றார் தனுஷ். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரைக்கு  வருகிறது. 
இந்த படத்தை முடித்ததும் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 55வது படத்தில்  நடிக்கும் தனுஷ், அதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் தனது 56வது படத்தில் நடிக்கபோகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை 2026ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடத்த திட்டமிட்டுள்ளார்  மாரி செல்வராஜ். மேலும், இதுவரை மண் சார்ந்த படங்களாக இயக்கி வந்துள்ள மாரி செல்வராஜ், தனுஷ் நடிக்கும் படத்தை வெளிநாடுகளுக்கும் சென்று  படப்பிடிப்பு நடத்த போகிறார். அதனால் இதுவரை அவர் இயக்கிய படங்களில் இந்த படம் அதிகப்படியான பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.