ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழ் சினிமாவில் பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என செயல்பட்டு வருபவர் சின்மயி. மீடூ மூலம் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இன்று வரை தனக்கு நியாயம் வேண்டி போராடி வருகிறார். அதோடு சமூக சார்ந்த குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இதனாலேயே சமூகவலைதளங்களில் ஒரு கூட்டம் இவரை எப்போதும் விமர்சித்தும், வசைபாடிக் கொண்டே இருக்கும்.
இந்நிலையில் தற்போது ஒரு திருமண நிகழ்ச்சியில் தனது கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரனுடன் கலந்து கொண்டார் சின்மயி. அப்போது புடவையில் இருந்ததால் சற்று உடல் பருமான காணப்படுகிறார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று சோசியல் மீடியாவில் செய்தி பரப்பி விட்டார்கள்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சின்மயி. ‛‛நான் கர்ப்பமாக இல்லை. அதனால் பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்திருப்பவர், அப்படியே குழந்தை பிறந்தாலும் சமூகவலைதளத்தில் பகிர மாட்டேன். அதோடு குழந்தை வளர்ந்த பிறகு சோசியல் மீடியா பக்கம் செல்ல விடமாட்டேன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.




