டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் 65வது திரைப்படமாக பீஸ்ட் படம் வேகமாக உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இதில் விஜய்- பூஜா ஹெக்டேவின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதையடுத்து 14 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க இருந்தது. ஆனால் கொரானா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்ட்டது. தற்போது கொரானா தொற்று குறைந்ததால் அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன் தினம் படப்பிடிப்பு தொடங்கியது.
சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. பீஸ்ட் படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றி வருகிறார். ஜானி மாஸ்டர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினரோடு இணைந்து ஜானி மாஸ்டர் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். அப்போது ஜானி மாஸ்டரை கட்டிப்பிடித்து விஜய் வாழ்த்து கூறினார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த சுவாரசிய சம்பவங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.