மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மத்திய அரசு ஒளிப்பதிவு வரைவு சட்டத்தில் 4 திருத்தங்களை கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது படங்கள் வெளிவந்த பிறகும் அதன் மீதான புகார்கள் வந்தால் படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்பும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குவது. இதற்கு சினிமாவில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால், கவுதம் மேனன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்துள்ள நிலையில் இயக்குனர் அமீர் படத்தில் பன்ஞ் டயலாக் பேசி வீரம் காட்டும் ஹீரோக்கள் ஒன்றிணைந்து இதை எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் தேசத்தின் பன்முகத் தன்மையை மாற்றத் துடிக்கும் இப்போதைய அரசு கடந்த 7 ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக அதற்கான வேலைகளை மிகுந்த திட்டமிடலோடு செய்து வருகிறது. தமிழர்களின் போராட்ட வரலாற்றைத் திரித்துச் சொல்லும் பேமிலி மேன்2 போன்றவை வெளிவர அனுமதிக்கும் இச்சூழலில், இனிவரும் காலங்களில் இந்தியத் திரைப்படங்களின் மூலமாக நாட்டின் உண்மைத் தன்மையையும், மக்களின் எண்ண ஓட்டங்களையும் இந்தியத் திரைப்படப் படைப்பாளிகள் பதிவு செய்துவிடக்கூடாது என்கின்ற சர்வாதிகார நோக்கத்தோடு ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021ஐ தற்போது கொண்டு வந்திருக்கிறது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
இப்புதிய சட்டத்திருத்த மசோதாவின் சரத்துகளில், முக்கியமாக மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழை, அரசு நினைத்தால் ரத்து செய்யலாம் என்ற திருத்தம் ஆளும் பா.ஜ.க., அரசின் சர்வாதிகாரத் தன்மையை மிகத் தெளிவாக நமக்குக் காட்டுகிறது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021ஐ படத்தில் பன்ஞ் டயலாக் பேசி வீரம் காட்டும் ஹீரோக்கள் உள்பட அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று எதிர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.