மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'இந்தியன் 2' பட விவகாரத்தில் தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கர் போகக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக ஷங்கர், ராம் சரண் கூட்டணி சேர உள்ள தெலுங்குப் படத்திற்கான சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. வழக்கின் காரணமாக இப்படத்தை ஷங்கர் இயக்குவாரா மாட்டாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. ராம் சரண் கூட ஷங்கருக்கு ஒரு வாரம் மட்டுமே டைம் கொடுத்ததாகவும் டோலிவுட்டில் சொன்னார்கள்.
தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் ராம் சரண் படத்தை ஷங்கர் தாராளமாக இயக்கலாம். இருப்பினும் 'இந்தியன் 2' படத்தைத் தயாரிக்க சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்த தயாரிப்பாளரை ஷங்கர் தவிக்க விட்டுச் செல்வது குறித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சிலர் கொதிப்பில் இருக்கிறார்கள்.
சமீப காலமாக சில முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் தமிழ் தயாரிப்பாளர்களைப் புறக்கணித்து தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஷங்கர், விஜய், தனுஷ் ஆகியோரது அடுத்த படங்களை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.