மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
பிரபல நடிகை வனிதா விஜயகுமார். நடித்த படங்கள் குறைவு என்றாலும் சர்ச்சைகளாலேயே மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். கடந்தாண்டு கூட கொரோனா காலக்கட்டத்தில் மூன்றாவது திருமண சர்ச்சையில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கெடுத்து வருகிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சமீபத்தில் இந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி இருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் வனிதா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : ‛‛பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் காளி அவதாரத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நான் வெளியேறுகிறேன். ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதை நான் ஏற்க மாட்டேன். அது என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. அது உலகத்துக்கே தெரியும். விஜய் டிவி என் குடும்பமாகிவிட்டது. எங்களுக்குள் நல்ல பரஸ்பர புரிதல் உண்டு. அது எப்போதும் தொடரும். ஆனால் வேலை செய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாத நெறிமுறையற்ற விஷயங்களை ஏற்க முடியாது.
என் தொழில் வளர்ச்சியை பொறுக்காத ஒருவரால் எனக்கு தொல்லை ஏற்பட்டது. என்னை அவமானப்படுத்தி, மோசமாக அவர் நடத்தினார். பெண்களும் பொறாமை கொண்டு மோசமாக நடந்து கொள்கிறார்கள். எங்கள் வாய்ப்புகளை அழிக்கிறார்கள். என்னை தொடர்ந்து படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பார்க்கலாம். உழைத்து முன்னேறிய ஒரு மூத்த நபரை, முன்னேற துடிக்கும் இளைஞர்கள் கீழ்மையாக பார்ப்பதும், அவமானப்படுத்துவதும் வேதனையாக உள்ளது. குடும்பம், கணவர் ஆதரவு இன்றி மூன்று குழந்தைகளுக்கு தாயாக சாதிக்கும் என்னை இப்படி நடத்துகிறார்கள். பெண்கள் சக பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களின் வாழ்வை மோசமாக்க கூடாது. இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவது வருத்தம். மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
சுரேஷ் சக்கவர்த்தி என்னை மன்னித்து விடுங்கள். என்னால் நீங்களும் இந்த போட்டியிலிருந்து விலக வேண்டியதாகிவிட்டது. நீங்கள் அருமையான ஜோடி. தொழில்முறையாக என் முடிவுக்கு நீங்கள் ஆதரவு தந்தீர்கள்.
இவ்வாறு வனிதா தெரிவித்துள்ளார்.