பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
நடிகர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்த அவரது இணை தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவர் கடன் பிரச்சினையால் ஏற்பட்ட தொல்லை காரணமாக 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சினிமா பைனான்சியர் போத்ரா, தன்னிடம் கடன் வாங்குபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என்று பத்திரிக்கை ஒன்றில் பேட்டி அளித்திருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இதையடுத்து அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் பைனான்சியர் போத்ரா.
இந்நிலையில் போத்ரா இறந்து விட்ட நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.