ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' |
2003ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த 'ஜெயம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரவி. இப்போது, இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது, 'ஜெயம் ரவி' என்று சொன்னால் மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு தான் நாயகனாக அறிமுகமான முதல் படத்தின் பெயரே ரவிக்கு ஒரு அடையாளமாக மாறிப் போனது.
அப்பா தயாரிக்க, அண்ணன் இயக்க ஒரு குடும்பப் படத்தில்தான் அறிமுகமானார் ஜெயம் ரவி. அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அவரை தமிழ் சினிமாவில் 18 வருடங்கள் வெற்றிகரமாக நடைபோட உதவியுள்ளது. குடும்பமே கலைக்குடும்பமாக இருந்தாலும் தனித் திறமை இல்லை என்றால் இத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியாது.
அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்' என வெற்றி கொடுத்தாலும் ஆரம்ப காலங்களில் மற்ற இயக்குனர்களின் படங்களில் ஜெயம் ரவி நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 2009ம் ஆண்டில் வெளிவந்த 'பேராண்மை' படம் தான் அவருக்கு அந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்ந்தார்.
தொடர்ந்து வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணித்து வந்தாலும் அவருடைய மார்க்கெட்டை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். “நிமிர்ந்து நில், ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம், மிருதன், போகன், டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.
தற்போது 'ஜனகனமன, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும் விதமான படங்களைக் கொடுப்பதே ஜெயம் ரவியின் தொடர்ச்சியான ஜெயத்திற்குக் காரணம்.