ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கார்த்திக் சுப்பராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களை மட்டுமல்ல, முகம் தெரியாத நைஜீரிய சிறுவர்களையும் கூட கவர்ந்துள்ளது. ஆம் சோஷியல் மீடியாவில் தற்போது நைஜீரிய சிறுவர்கள் இணைந்து ஜகமே தந்திரம் டிரைலரை தங்கள் பாணியில் உருவாக்கி நடித்துள்ளனர்.
ஒரிஜினலில் வரும் காட்சிகள் போலவே தங்களது கெட்டப்பை மாற்றிக்கொண்டு, தமிழில் வசனங்களை பேசி நடித்துள்ள இவர்கள், ஜகமே தந்திரம் என்கிற டைட்டிலையும் தமிழிலேயே எழுதி இணைத்துள்ளனர். டிரைலரில் தனுஷின் மேனரிசங்களை அந்த சிறுவன் அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கும்போது நைஜீரியாவிலும் தனுஷ் ரசிகர்களா என்கிற ஆச்சர்யம் எழாமல் இல்லை..