சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கொரோனா இரண்டாவது அலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. மூன்றாவது அலை பாதிப்பும் ஏற்படும் என கூறியுள்ளார்கள். அது எப்போது வரும் என்பது தெரியாது என்றாலும் எப்படியும் சில மாதங்கள் கழித்து இருக்கலாம் என்று யூகிக்கிறார்கள். அதற்கு முன்பு மக்கள் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் மூன்றாவது அலையிலிருந்தும் தப்பிக்கலாம் என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தமிழ் டிவிக்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முதல் மூன்று சீசன்களிலும் ஜுன் மாதங்களில்தான் ஆரம்பமானது. ஆனால், கடந்த வருடம் கொரோனா பாதிப்பால் அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பொங்கல் சமயத்தில் முடித்தார்கள்.
இப்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறையும் சூழலில் இந்த மாதக் கடைசிக்குள் முழுவதுமாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனை ஜுலை மாதத்தில் ஆரம்பித்து அக்டோபர் மாதத்திற்குள் முடிப்பது சரியாக இருக்கும். இந்த காலகட்டத்தை பிக் பாஸ் தயாரிப்பாளர்கள் யோசித்துவிட்டது போலவும் தெரிகிறது.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5க்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன என்று தகவல் வெளிவந்துள்ளது. கடந்த வருடம் தெலுங்கு பிக் பாஸ் ஆரம்பமான பிறகுதான் தமிழ் பிக் பாஸை ஆரம்பித்தார்கள். எனவே, தமிழிலும் ஆரம்பக் கட்டப் பணிகள் ஆரம்பமாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கலாம். நிகழ்ச்சிக்கான பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் போட்டுக் கொள்ள வைத்தும் நிகழ்ச்சியை நடத்தலாம்.
சென்னை, பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான நிரந்தர அரங்கு உள்ளது. அதில்தான் இந்த வருடத்திற்கான மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆனால், ஊரடங்கு விதிக்கப்பட்ட பின்பும் நிகழ்ச்சியை நடத்தியதை அடுத்து அந்த அரங்கிற்கு கடந்த மாதம் 'சீல்' வைத்தார்கள். அந்த சிக்கலைத் தீர்த்த பிறகுதான் இந்த வருட தமிழ் பிக் பாஸ் சீசன் 5க்கான அரங்கம் அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க முடியும்.
இந்த வருட 5வது சீசனுக்காக கமல்ஹாசன் கூட மார்ச் மாதத்திலேயே அட்வான்ஸ் வாங்கி அதை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி விட்டார் என்றும் சொன்னார்கள். எனவே, அரங்கத்திற்கான 'சீல்' சிக்கல்களை எல்லாம் முடித்து விரைவில் அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.