4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் மூலம் அறிமுகமானவர் அபி சரவணன். அதன் பிறகு டூரிங் டாக்கீஸ், பட்டதாரி, மாயநதி படங்களில் நடித்தார். அந்த ஒரு நாள், பிளஸ் ஆர் மைனஸ், நாடகம் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தராதிபன் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். இதில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக பிரியங்கா நடிக்கிறார். சையத் என்ற புதுமுகம் இயக்குகிறார். எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார், எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார். இது டில்லியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாராகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.




