ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கோயம்புத்தூர் பொண்ணு பவித்ர லட்சுமி. மாடலிங் துறையில் இருந்த இவர் மெட்ராஸ் குயின் பட்டம் வென்றதும் கவனிக்கப்பட்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் ஆகலாம் பிரபுதேவா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். குக் வித் கோமாளி 2வது சீசன் மூலம் மேலும் புகழ்பெற்றார்.
இதனால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தில் நடித்தார். தமிழில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது ஏனென்றால் காதல் என்பேன் என்ற குறும் படத்தில் நடித்துள்ளார். இது யு டியூப்பில் வெளியாகி உள்ளது.
விஜய் தங்கய்யன் என்ற இளைஞர் இயக்கி நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: நவயுக காதலர்களின் உணர்வுகளை மெலிதான நகைச்சுவையுடன் படமாக்கியிருக்கும் குறும்படம். அதுமட்டுமல்லாமல், மிக மென்மையான காதலெனும் உணர்வை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறோம். அதற்காக கதாபாத்திரங்களை வலுவானதாகக் கட்டமைத்துள்ளோம். பவித்ரா லட்சுமிக்கு தமிழ் சினிமாவில் வலுவான இடம் அமைத்து தர இந்த குறும்படம் அவருக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும். என்றார்.