ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் நிலா என்ற பெயரில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, ஜெகன் மோகினி, இசை, கில்லாடி, உள்பட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மீரா சோப்ரா. தற்போது நாஸ்டிக், மொலி பூவு படங்களில் நடித்து வருகிறார்.
மும்பை தானே பகுதியில் வசித்து வரும் மீரா சோப்ரா, போலியான அடையாள அட்டையை காட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தானே மாநகராட்சியின் பார்க்கிங் பிளாசா கொரோனா தடுப்பூசி முகாமில் அவர் தடுப்பூசி போட்டிருக்கிறார். இங்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில் மருத்துவ பணியாளர் போன்ற அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி போட்டுள்ளார்.
அந்த அடையாள அட்டை இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து தனது டுவிட்டரில், நான் ஆதார் கார்டை பதிவேற்றி முன்பதிவு செய்து அதன்படியே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இதற்கு பதிலிளித்துள்ள மாநகராட்சி அதிகாரி ஒருவர். தடுப்பூசி போட முன்பதிவு செய்ய ஆதார் கார்டு போதுமானது. ஆனால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடாத இடத்தில் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே வயது வித்தியாசம் இன்றி தடுப்பூசி போடப்படும். அதற்கு அவர்கள் ஆதார் தவிர்த்து முன்கள பணியாளருக்கான அடையாள அட்டையை காட்ட வேண்டும். என்று பதில் அளித்திருக்கிறார்.
மீரா சோப்ரா போலியான அடையாள அட்டை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்ற விசாரணையை மும்பை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.