ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுமாகி கடந்த 15 வருடங்களில் 50 படங்கள் நடித்தவர் ஹன்சிகா. அவரது 50வது படம் மஹா. விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது படங்கள் எதுவும் கையில் இல்லாத நிலையில் ஆல்பங்களில் ஆடி வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கும் உறவுப் பெண் முஷ்கனுக்கும் உதய்பூர் தி ராயல் ட்ரீட் என்ற நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒரு தொகுப்பாக இப்போது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தில் அவர்களின் திருமணம் தொடர்பான சடங்குகள் இடம் பெற்றுள்ளன. அதோடு, அந்த திருமணத்தில் ஹன்சிகாவுக்கு மேக்-அப் போடுவது, விலை உயர்ந்த ஆடைகள் அணிவது உள்ளிட்ட காட்சிகளோடு நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் ஹன்சிகாவும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு விளையாடுவது, ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
அதேசமயம் கொரோனா காலக்கட்டத்தில் யாரும் முககவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என விமர்சனங்களும் எழுந்துள்ளன.