டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கொரோனா தொற்று பரவலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. இதனால் நோயை கட்டுப்படுத்த அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் சினிமாத்துறையில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இனிமேல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதி என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திரையுலகினர் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோக்களையும் வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், ரஜினிகாந்த், நயன்தாரா, விக்னேஷ் சிவன் என பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேசும் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.




