என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் |
வெயில், அங்காடி தெரு, அரவாண், காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, அதன் பிறகு நுரையீரலும் பாதிக்கப்பட்டு, மரணத்தின் அருகில் சென்று விட்டு திரும்பி இருக்கிறார். நண்பர்களால் தான் உயிர்மீண்ட கதையை தனது முகநூல் பக்கத்தில் அவர் உருக்கமாக எழுதியிருக்கிறார். அது வருமாறு:
மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்குருவியாய் இல்லம் திரும்பினேன். ஒரு மாத பூர்ண ஓய்வுக்கு பிறகு மெல்ல என் பணிக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அபாயக் கட்டத்தைக் கடக்க நட்பின் கரங்களால் பேருதவி செய்த சில உயர்ந்த உள்ளங்களை நினைவு கூறாமல் என் கடமை தீராது
கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் தினத்தில் இருந்து எனக்கான மருத்துவ ஆலோசனைகளை சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் வழங்கிய வண்ணம் இருந்தார். ஆனால் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிறைந்து வழிந்ததால் நானே முடிவெடுத்து வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டதில் காய்ச்சல் குறையவில்லை.
சகல வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து விடுங்கள் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தினார். ஆனால் என் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு என் இல்லம் அருகே உள்ள சின்ன மருத்துவமனையில் சேர்ந்தேன்.
ஆனால் அங்கு சேர்ந்த பிறகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் என் உடல்நிலை மோசமான சூழ்நிலையை எட்டியபடியிருந்தது. தயாரிப்பாளர்கள் சதீஷ்குமாரும், டி.சிவாவும் எனை பெரிய மருத்துவமனைக்கு மாறிவிடும்படி எச்சரித்த வண்ணம் இருந்தனர்.
அன்றிரவு எனக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் என் நுரையீரல் மருத்துவமனையில் சேர்ந்த போது ஏற்பட்ட பாதிப்பை விட மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாகவும் காட்டியது. நண்பர்கள், நலம் விரும்பிகள் என்னை அப்பல்லோவில் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள். "அப்போலாலாம் நமக்கு சரியா வருமா. நாமளலாம் மிடில்கிளாஸ் என்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என்று என்று கெஞ்சினேன்.
வலுக்கட்டாயமாக அங்கு சேர்த்தார்கள். அங்கு என்னை பரிசோதித்த டாக்டர் ஒரு உயிர்காக்கும் மருந்தின் பெயரை உச்சரித்து இந்த மருந்து அது எங்கள் மருத்துவமனையில் இப்போது ஸ்டாக் இல்லை எங்கிருந்தாவது 24 மணிநேரத்திற்குள் தருவியுங்கள். ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என்று அறிவுறுத்தினார்.
எனது நண்பர்கள், நலம் விரும்பிகள், அதிகாரிகள், டாக்டர்களின் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த மருந்து கிடைத்தது. அந்த மருந்து என் ரத்த நாளங்களில் ஏற்றப்பட்ட 48 மணி நேரம் கழித்து நான் அபாயக் கட்டத்தைக் கடந்தேன். நான் இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் என் நண்பன் வரதன், டாக்டர் கு.சிவராமன்.
இவ்வாறு வசந்தபாலன் எழுதியிருக்கிறார்.