ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் சுனைனா. தற்போது இவர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இதுப்பற்றி டுவிட்டரில், ‛‛அதிக எச்சரிக்கை உடன் இருந்தும் எனக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி, தகுந்த விதிமுறைப்படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகிறேன். என் குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் நான் தொடர்பில் இல்லை. இதனால் அவர்களும் தனிமையில் உள்ளனர். சமூகவலைதளத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஓய்வு எடுக்க விருப்பம் என்றாலும் சிறு உதவியாக இருக்கும் பல விஷயங்களை மற்றவர்களுக்கு பகிரும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. தயவு செய்து அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். உயிரை காப்பாற்றுங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனை என பதிவிட்டுள்ளார்.




