துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
நடிகை சுனைனா தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சமர், லத்தி, நீர் பறவை, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சுனைனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் கஜினி படம் அவருக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் "நான் தமிழ் திரையுலகத்தில் நுழைந்தபோது மொழி தெரியாமலேயே பல தமிழ் படங்களைப் பார்த்தேன். அதில் கஜினி படம் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சினிமாவில் ஒரு கதையின் தாக்கத்தை உணர மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதுதான் சினிமாவின் சக்தி. கஜினி திரைப்படம் என் மனதில் தனி இடத்தை பிடித்ததற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் அழகை இந்த படம் எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்போது இதனை பகிர்வதற்கு காரணம் நேற்று எக்ஸ் வலைதளத்தில் கஜினி படத்தின் முக்கியமான காட்சியின் புகைப்படம் தான்" என குறிப்பிட்டுள்ளார்.