‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் மதராஸி. சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜூ மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது: சினிமா என்பது 100 சதவிகிதம் பொழுதுபோக்கும் விஷயம்தான். இப்போதல்லாம் சினிமாவில் யாரும் அட்வைஸ் பண்ணுவதை விரும்புவதில்லை. செல்போனில் அட்வைஸ் கொட்டுகிறது. அதை செய், இதை செய்யாதே என்று சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அதுதான் நமக்கு தெரியுமா இதை ஏன் சினிமாவில் சொல்கிறார்கள் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனாலும் சினிமாவில் தப்பான கருத்தை சொல்லிவிடக்கூடாது அதில் நான் உறுதியாக இருக்கிறேன். பொழுதுபோக்கை சினிமாவில் எவ்வளவு அழகாக சொல்ல வேண்டும், ஆழமாக சொல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வெறும் அறிவுரை மட்டும் சொன்னால், ஆடியன்ஸ் தியேட்டரை விட்டு வெளியே சென்று விடுவார்கள். நம்ம ஊர்ல பிரசாதம்கூட இனிப்பா இருந்தாதான் சாப்பிடுவாங்க.
சிவகார்த்திகேயன் எந்த பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து முன்னேறியவர். இப்போது அவரை வைத்து நான் இயக்கி உள்ள 'மதராஸி' படம் 'கஜினி' மாதிரியான திரைக்கதையும், 'துப்பாக்கி' மாதிரியான ஆக்ஷனும் கொண்டதாக இருக்கும். முடிந்தவரை அதை அடைந்திருப்பதாக நினைக்கிறேன். என்றார்.




