இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராஜ்கிரண். தொடர்ந்து குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது போட்டோவை பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபடுவதாக எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது சாதாரணமாக நடக்கும் விசயம்.
இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு என் சொந்தக்காரர்கள் என்றோ எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.
"கனடா செல்வம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நபர் ஒருவர் என்னை வைத்து படம் தயாரிப்பதாக ஏழெட்டு ஆண்டுகள் முன்பு என்னிடம் போட்டோ எடுத்துக் கொண்டார். ஆனால் இதுவரை படம் எடுக்கவில்லை. அந்த நபர் இப்போது தன் பெயரை "ஸ்டார்லின்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது.
என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கதைகள் பல சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.