வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை |

தமிழ்த் திரையுலகில் தற்போதைய வசூல் நடிகர்களில் விஜய் தான் முன்னணியில் இருக்கிறார். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர்ச்சியாக நல்ல வசூலைக் கொடுத்ததால் படத்திற்குப் படம் அவருடைய சம்பளம் அதிகமாகி வந்ததாகச் சொல்கிறார்கள்.
'மாஸ்டர்' படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் 80 கோடி என்றார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு 50 சதவீத இருக்கை அனுமதியில் மட்டுமே அவருடைய படம் வெளிவந்ததால் தன்னுடைய சம்பளத்திலிருந்து சில பல கோடிகளை விட்டுக் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தன.
விஜய் தற்போது அவருடைய 65வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய 66வது படத்தை தெலுங்கு இயக்குனரான கார்த்தி நடித்த 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளதாக ஒரு செய்தி வெளிவந்தது. அப்படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அப்படத்திற்காக விஜய்க்கு 90 கோடி சம்பளத்தைத் தர அவர் தயாராக இருக்கிறாராம். படத்தின் பட்ஜெட்டாக 150 கோடிக்கு மேல் செலவிட திட்டமிட்டுள்ளார்களாம். இதுதான் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போதைய ஹாட் டாபிக் என்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தெலுங்குத் தயாரிப்பாளரின் படத்தில் விஜய் நடிப்பாரா என்பது விரைவில் தெரிய வரலாம்.




