அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. அவருடைய அடுத்த படம் பற்றிய விவாதத்தில் தற்போது இருந்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் சமூக வலைத்தளங்களுக்கு வந்துவிட்டார்கள். இருந்தாலும் சிலர் இன்னும் அந்தப் பக்கமே வராமல் இருக்கிறார்கள்.
தற்போது புதிய வரவாக இயக்குனர் பாலா டுவிட்டர் பக்கம் வந்திருக்கிறார். அவருடைய முதல் டுவீட்டாக முதல்வரைப் பாராட்டி கடிதம் எழுதி அதன் மூலம் டுவிட்டரில் தன் முதல் பதிவை இட்டிருக்கிறார்.
“தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிப்பதைத் தவிருங்கள்,' என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம், நன்றிகள்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்,
கோனோக்கி வாழுங் குடி,” என்ற குறளுடன் தன் பாராட்டு மடலைப் பதிவிட்டிருக்கிறார்.




