ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
காமெடி நடிகர், ஹீரோ, சமூக ஆர்வலர் என தன்னை பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் மறைந்த நடிகர் விவேக். இவருக்கு படம் இயக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. சமீபகாலமாக அதற்கான பணியில் தீவிரமாக இறங்கி இருந்தார். இந்நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலே போய்விட்டது.
இதுகுறித்து நடிகை இந்துஜா கூறுகையில், ‛‛மறைந்த நடிகர் விவேக் அவர்கள் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதில் நான் நடிப்பதாக இருந்தது. அதற்கான மீட்டிங் இந்த வாரம் இருந்தது. ஆனால் தற்போது விவேக் சார் மறைந்து விட்டார்'' என தெரிவித்துள்ளார்.
இவரைப்போன்று சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் கூறுகையில், ‛‛நடிகர் விவேக் நல்ல மனிதர், சமூக ஆர்வலர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர் மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். ஆம், கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்ய ஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களுடைய தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, பல முறை கதை ஆலோசனையிலும் ஈடுப்பட்டு படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடத்திக் கொண்டிருக்கும் தருவாயில் அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்ற மற்றுமொரு பரிமாணத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.