வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்(86), கொரோனா அறிகுறி உடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குனர்களே கமர்ஷியலாக தொடர்ந்து படங்கள் இயக்கி, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய இவர், சிவாஜி, ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரை வைத்துபடங்களை இயக்கி உள்ளார். இதுவரை 72 படங்களை இயக்கியுள்ளார். இதில் ரஜினியை வைத்து மட்டும் 25 படங்களை இயக்கி, அவற்றை பெரும்பாலும் வெற்றி படங்களாக கொடுத்துள்ளார் உள்ளார்.
ரஜினியின் சினிமா பயணத்தில் எஸ்.பி.முத்துராமனின் பங்கு இன்றியாமையாதது. கடைசியாக தொட்டில் குழந்தை என்ற படத்தை இயக்கினார். அதன்பின் படங்களை இயக்கவில்லை. சினிமா தொடர்பான நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொண்டு வந்தார்.
இந்நிலையில் 86 வயதை கடந்துவிட்ட எஸ்.பி.முத்துராமனுக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. தற்போது அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : ‛‛கொரோனா அறிகுறிகளுடன் எங்களது மருத்துவமனையில் எஸ்.பி.முத்துராமன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.