தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
அண்ணாத்த படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு தனி விமானத்தில் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அண்ணாத்த'. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்தாண்டு நடந்தது. கொரோனா பிரச்னை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்றது. பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டதும், மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கினர். அப்போது அங்கு படக்குழுவில் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு நின்றது. அதோடு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என கூறி வந்த ரஜினி, உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் இனி இல்லை என அறிவித்தார்.
பிறகு சமீபத்தில் சென்னையில் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கினர். இங்குள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினியும் சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றார். தற்போது மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அண்ணாத்த படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக இன்று(ஏப்.,8) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் பறந்து சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.