'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி | முன்னாள் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கரிஷ்மா கபூர் | 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! | 'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன் | விக்ரம்பிரபு பட விழாவில் ஆதிக்ரவிச்சந்திரன் | 'பறந்து போ' படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ஜூன் 24ல் ரிலீஸ்! | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் கூலாக இருந்த விஜய்! - மமிதா பைஜூ சொன்ன தகவல் | கமலிடம் நஷ்ட ஈடு கேட்கும் 'தக்லைப்' படத்தின் கர்நாடக விநியோகஸ்தர்! |
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான மாநாடு அரங்கம் ஒன்று கடந்த ஒரு வார காலமாக அமைக்கப்பட்டு வந்தது. அந்த வேலைகள் முடிவடைந்து இன்று அல்லது நாளை அங்கு கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இதில் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இப்படத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து சிம்பு நடித்து வருவதாகச் சொல்கிறார்கள். கொரோனா காலத்திலும் படப்பிடிப்புக்குத் தவறாமல் வருகை தந்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது 'மாநாடு'.