கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல |

மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த பெண் நிவேதா பெத்துராஜ். மாடலிங் துறையில் இருந்த இவர் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். தொடர்ந்து ‛என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். துபாயில் வசிக்கும் இவர் சமீபத்தில் ரஜித் இப்ரான் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் அவ்வப்போது சமூகம் சார்ந்த கருத்துக்களை பதிவிடும் இவர் இப்போது, ‛‛செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும் கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகிறது. நாம் தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை, நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்துவிடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை'' என குறிப்பிட்டுள்ளார்.