பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
2025ம் வருடத்தில் இந்த செப்டம்பர் மாதத்துடன் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 200 கடந்துவிட்டது. கடந்த வாரம் 195 படங்கள் வெளிவந்த நிலையில் இன்று வெளியான ஏழு எட்டு படங்களுடன் சேர்த்து வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கை 200 கடந்துள்ளது. இந்த 200 படங்களில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் 10 படங்களுக்கும் குறைவாகவே இருக்கும்.
கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் செப்டம்பர் மாதத்துடன் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 180 மட்டுமே இருந்தது. இந்த வருடத்தில் அது 20 படங்கள் கூடுதலாக வந்து 200 கடந்துள்ளது. இதனை வைத்துப் பார்த்தால் எஞ்சியுள்ள இன்னும் மூன்று மாதங்களில் வெளியாக உள்ள படங்களின் எண்ணிக்கை நிச்சயம் 50 கடந்து விடும் என தெரிகிறது. தமிழ் சினிமாவின் 100 வருட வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.