இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு |
கதாநாயக நடிகர்கள் எழுபது வயதானாலும் இருபது வயது நடிகையருடன் ஜோடியாக நடித்து டூயட் பாடுவதை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் ஏற்றுக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. இப்போது கொஞ்சம் நிலைமை மாறிவிட்டது. தங்கள் வயதுக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களில் மட்டும் அந்த வயதான நடிகர்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
கதாநாயகிகள் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு அவர்களை அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்பதுதான் வழக்கமாக இருந்தது. அதுவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. வயதானாலும் பரவாயில்லை இளமையும், அழகும் அப்படியே இருந்தால் கதாநாயகிகளாகத் தொடரலாம் என இயக்குனர்களும், ரசிகர்களும் நினைத்துவிட்டார்கள்
தமிழ் சினிமாவில் 21 வருடங்களாக கதாநாயகியாக நடித்து வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டுமே. 2002ம் ஆண்டு 'மௌனம் பேசியதே' படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தவருக்கு நடுவில் சில வருடங்கள் மட்டும் சிறந்த வெற்றிகள் அமையவில்லை. ஆனால், '96' படம் அவரை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு வந்தது. அடுத்து வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 1, 2' ஆகிய படங்கள் த்ரிஷாவைப் பற்றி அதிகம் பேச வைத்தது. அதன் தொடர்ச்சியாக விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அஜித்தின் 'விடாமுயற்சி' படத்திலும், தனுஷின் பெயரிடப்படாத 50வது படத்திலும் அவர்தான் கதாநாயகி என்று தகவல் பரவி வருகிறது.
த்ரிஷாவின் அடுத்த வெளியீடாக 'த ரோட்' படம் வெளிவர உள்ளது. மீண்டும் தனது ஆரம்ப கால அலையை த்ரிஷா உருவாக்கி வருகிறார்.