‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடந்த பல வருடங்களாகவே அவருடைய இடத்தை வேறு யாராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அவருக்கென வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.
2003ல் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளிவந்த 'மனசினக்கரே' என்ற மலையாளப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 2005ல் ஹரி இயக்கத்தில் வெளிவந்த 'ஐயா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
சினிமாவுக்காக கேமரா முன் நின்று 22 வருடங்கள் ஆகிறது என்பது குறித்து நயன்தாரா பதிவிட்டுள்ளார். “திரைப்படங்கள் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல், கேமரா முன்பு நான் முதல் முறையாக நின்று 22 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு அமைதியும்... என்னை வடிவமைத்தது, குணப்படுத்தியது, நான் யார் என்று உருவாக்கியது. என்றென்றும் நன்றியுடன்,” என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழில் 'மூக்குத்தி அம்மன் 2, ஹாய்' ஆகிய படங்களிலும் தெலுங்கில் 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்திலும், கன்னடத்தில் 'டாக்சிக்' படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.




