பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகரான சிவகுமாருக்கு சூர்யா, கார்த்தி என இரு மகன்கள். இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.
நடிகர் கார்த்திக்கும் ரஞ்சனி என்பவருக்கும் 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 7 வயதில் உமையாள் என்ற மகள் இருக்கிறாள். கடந்த வருடம் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஐந்து மாதங்களாக அக்குழந்தைக்கு 'கந்தன்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அதற்காக மகனுக்கு ஒரு கடிதம் எழுதி அப்பெயரை அறிவித்திருக்கிறார் கார்த்தி. “கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா,” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலத்தில் பலரும் பல்வேறு மொழிக் கலப்புடன் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர்களை வைக்கும் நிலையில் கார்த்தி அவரது குழந்தைகளுக்கு 'உமையாள், கந்தன்' என அழகு தமிழில் கடவுள்களின் பெயரை வைத்துள்ளார்.