ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நாடு முழுவதும் ஒரு பக்கம் கொரோனா பயமிருந்தாலும் சில சினிமா பிரபலங்கள் அதையும் மீறி சுற்றுலா சென்று வருகிறார்கள். கொரோனா தளர்வுகளில் வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி என்றதுமே பல சினிமா பிரபலங்கள் சுற்றுலாவுக்காகச் சென்ற முதல் இடம் மாலத் தீவு.
சினிமா பிரபலங்களை வரவேற்க அங்குள்ள நட்சத்திர ரிசார்ட்டுகள் 'ஸ்பான்சர்' செய்வதாகவும் தகவல். பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகைகள் நடிகர்கள் பலர் அடுத்தடுத்து மாலத் தீவிற்குச் சென்று ஓய்வெடுத்து விதவிதமான பல புகைப்படங்களைப் பதிவிட்டார்கள்.
அந்த வரிசையில் தற்போது தமிழ் மற்றும் மலையாளப் பட நடிகையான கனிகா, மாலத் தீவிற்குச் சென்றுள்ளார். அங்கு பிகினியில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். பிகினி போட்டோவை வெளியிடுவதற்கு வயது தடையில்லை என்பதை உணர்த்துகிறார் போலும்.
கனிகாவுடன் நடிகை ரம்யாகிருஷ்ணனும் மாலத் தீவிற்குச் சென்றுள்ளார் போலிருக்கிறது. ஒரே லொகேஷனிலிருந்து இருவரும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்கள்.