ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வினய், ஸ்ரீகாந்த், கார்த்திக், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா என இந்தப் பட்டியல் நீளமானது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார். இந்நிலையில் இந்த வரிசையில் நடிகர் ராகவா லாரன்ஸும் சேர இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது ஏற்கனவே தெரிந்த தகவல் தான். இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சட்டசபைத் தேர்தல் பணிகளில் கமல் பிஸியாக இருப்பதால், தேர்தலுக்குப் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான் இந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார். ஹீரோ மட்டுமின்றி இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகத் திறமையாளராக விளங்கி வருகிறார். எனவே விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.