அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தீபாவளிக்கு வெளியான பைசன் படம் இதுவரை 60 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. மழை காரணமாக சில நாட்களாக வசூல் நிலவரம் திருப்திகரமாக இல்லை என்கிறார்கள். கடந்த 24ம் தேதி தெலுங்கிலும் பைசன் ரிலீஸ் ஆனது. இதற்காக படக்குழுவினர் ஐதராபாத் போய் படத்தை விளம்பரம் செய்தனர். ஆனால், படம் தோல்வி அடைந்துவிட்டது. அங்குள்ள ரசிகர்களுக்கு இந்த கதை, குறியீடு, சில விஷயங்கள் புரியவில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் கதை வேறு என்கிறார்கள். இதனால், விக்ரம் மகன் துருவின் தெலுங்கு பயணம் வெற்றிகரமாக இல்லை. ஆனால், டியூட் தெலுங்கில் பெரிய வெற்றி என்பது தனிக்கதை.
இந்நிலையில், வருங்காலத்தில் பைசன் படத்துக்கு பல விருதுகள் கிடைக்கும். கண்டிப்பாக மாநில அரசின் பல விருதுகள் உண்டு என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது கிடைக்குமா என்று விசாரித்தால், பைசன் படத்தை தயாரித்தவர் பா.ரஞ்சித். அவர் தொடர்ச்சியாக மத்திய அரசை விமர்சனம் செய்கிறார். அவரின் படங்கள், கதைகள் தேசிய சிந்தனைக்கு எதிராக இருக்கிறது. ஆகவே, பைசன் படத்துக்கு வாய்ப்பு குறைவு.
அதேசமயம், பைசன் படத்தை பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலர் பாராட்டியிருக்கிறார்கள். விளையாட்டை முக்கியமான விஷயமாக கதை பேசுகிறது. ஆகவே, தேசிய விருதுக்கு வாய்ப்பு இருக்கிறது. அது தேர்வு குழு செயல்பாடு, அதில் இருப்பவர்கள் மனநிலையை பொறுத்தது என்கிறார்கள்.