ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரேமம் படத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான சாய் பல்லவி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகி விட்டார். அதிலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் நாகசைதன்யாவுடன் அவர் நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. அதையடுத்து இன்று அப்படத்தில் இடம்பெற்ற சாரங்க டரியா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் பாவாடை தாவணி உடையணிந்து அழகு மிளிர நடனமாடியிருக்கிறார் சாய் பல்லவி. அவரது இந்த நடனத்தைப் பார்த்து சமந்தா தனது டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அந்த வகையில், தனுசுடன் நடித்த மாரி- 2வில் ரவுடிபேபி பாடல் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில், அடுத்தபடியாக லவ் ஸ்டோரி பட பாடலும் சாய் பல்லவியை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்கிற கருத்துக்களும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.