நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
விஷால் தயாரித்து நடித்து சமீபத்தில் வெளியான படம் சக்ரா. இதில் வில்லியாக நடித்துள்ளார் ரெஜினா கெசாண்ட்ரா. அவர் அளித்த பேட்டி வருமாறு:
தெலுங்கில் ஒரு படத்தில் வில்லியாக நடித்தேன். அதை பார்த்ததுவிட்டுதான் சக்ரா படத்தில் வில்லியாக நடிக்க அழைத்தார்கள். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இளம் வயதில் படிக்க முடியாத ஏக்கத்தில் தனக்கிருக்கும் கம்ப்யூட்டர் அறிவை பயன்படுத்தி கொள்ளை அடித்து அதை கொண்டு படிக்க நினைக்கிற கேரக்டர் எனக்கு பிடித்திருந்தது.
சக்ராவுக்கு பிறகும் நிறைய வில்லி வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து வில்லியாக நடித்தால் வில்லி நடிகை என்கிற இமேஜ் ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். அதுபற்றி கவலைப்படவில்லை.
நான் நடிக்கும் நெகட்டிவ் கேரக்டர்களை வில்லியாக நான் பார்க்கவில்லை. வித்தியாசமான கேரக்டர்களாக பார்க்கிறேன். தற்போது 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். அதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை குறைத்திருக்கிறேன்.
நான் நடித்து முடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் நடிக்கும் படத்தில் ஆக்ஷன் ஹீரோயின். நிறைய சண்டை காட்சிகள் படத்தில் இருக்கிறது. என்றார்.