மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராஜா சாப்' திரைப்படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இன்னொரு பக்கம் 'ஸ்பிரிட், பவ்ஜி, சலார் 2, மற்றும் கல்கி 2', இது தவிர சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'கண்ணப்பா' என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் ஒரு பக்கம் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் அவரது இன்னொரு படமான பவ்ஜி படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பிரபாஸ் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட மற்ற நட்சத்திரங்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். கடந்த 2015ல் பவன் கல்யாண், வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் வெளியான கோபாலா கோபாலா படத்தில் நடித்தவர் மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு பவ்ஜி படத்தின் மூலமாக தெலுங்கில் நுழைந்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸ் உடன் நடிக்காமலேயே தனது முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார் மிதுன் சக்கரவர்த்தி. குறிப்பாக நடிகை ஜெயப்பிரதாவு ஐவரும் நடிக்கும் காட்சிகள் இதில் படமாக்கப்பட்டன.
இந்த படப்பிடிப்பின் போது அவருக்கு கையில் அடிபட்டு கைமுறிவு ஏற்பட்டது. ஆனாலும் அப்போதைக்கு கையில் பேண்டேஜ் ஒட்டிக்கொண்டு பெயின் கில்லர் பயன்படுத்தி படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்துள்ளார் மிதுன் சக்கரவர்த்தி. ஆனாலும் அதற்கு அடுத்த நாளில் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க ஆரம்பித்தார் மிதுன் சக்கரவர்த்தி.
அதே சமயம் இவருக்கு இப்படி அடிபட்ட நிகழ்வு குறித்து கேள்விப்பட்ட பிரபாஸ், மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டு நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு நீங்கள் நடிக்க வந்தால் போதும்.. முதலில் உடல் நிலையை நன்றாக கவனியுங்கள் என்று அக்கறையாக கூறினாராம். இந்த மாத இறுதியில் இருந்து பிரபாஸ், மிதுன் சக்கரவர்த்தி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றனவாம்.