விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
‛டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. அதன் பிறகு சில வருடங்கள் கடந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 24வது படத்தை இயக்கவிருந்தார் என கூறப்பட்டது.
சமீபத்தில் இப்படத்தை இயக்குவதில் இருந்து சிபி சக்கரவர்த்தி விலகியுள்ளார். இதற்கடுத்து நானி படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளதால் அந்த படத்தை இயக்கிய பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைவார் என தகவல்கள் கூறப்பட்டது. இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி அடுத்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நானி தற்போது நடித்து வரும் ஹிட் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் உடனடியாக இதன் படப்பிடிப்பு துவங்கும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.