300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
விடாமுயற்சி படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' படம் வரும் ஏப்.,10ம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் நடித்து வந்த அஜித், கடந்த சில தினங்களாக கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்தது. இந்த ரேஸில் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. அதில் காயமின்றி அவர் தப்பினார்.
இதைத் தொடர்ந்து, ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடந்த ரேஸில் அஜித் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், தற்போது ரேஸில் பங்கேற்றார். ரேஸின் போது குறுக்கே வந்த ஒரு காரால், அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், அவரது கார் 3 முறை சுழன்றடித்தது. இருப்பினும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லேசான காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அஜித்தின் கார் விபத்துக்குள்ளான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதனை பார்க்கும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் அஜித்குமார் கார் விபத்துக்குள்ளாகும் போது அவரது காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பதிவாகியிருந்தது. அஜித் கார் சென்றுகொண்டிருக்கும்போது முன்னால் சென்ற கார் திடீரென மெதுவாக சென்றதால், அஜித்தின் கார், அந்த காரில் மோதி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாவது போன்ற வீடியோ பதிவாகி இருந்தது.
வீடியோவை பகிர்ந்த சுரேஷ் சந்திரா தெரிவித்ததாவது: ஸ்பெயின் நாட்டின் வாலென்சியாவில் கார் ரேஸ் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் அஜித்குமாரின் ரேஸ் கிளப்பும் பங்கேற்றது. 5வது சுற்றில் அஜித்குமார் பங்கேற்று இருந்தார். இதில் அவர் 14வது இடத்தை பிடித்தார். நேற்று 6வது சுற்று நடந்தது. இந்த போட்டியில் அஜித்குமார் பங்கேற்று இருந்தார். அப்போது அஜித்குமார் கார் விபத்தில் சிக்கியது.
அஜித் ஓட்டிச்சென்ற காரில் பதிவாகியிருந்த வீடியோவை பார்க்கும் போது அஜித் மீது எந்த தவறும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால் அந்த கார் மீது மோதியது. எனினும் அஜித்குமார் காரை திருப்பி இயல்பு நிலைக்கு கொண்டுவந்தார். ஆனால் இரண்டாவதாக அந்த காரில் மோதியதால் இரண்டு முறை பல்டி அடித்து கார் விபத்துக்குள்ளானது. அவரது விடாமுயற்சி வலிமைமிக்கது. எந்தவித காயமும் இன்றி வெளியே வந்தார். மீண்டும் அவர் கார் ரேஸில் பங்கேற்பார். அக்கறையுடன் அவருக்கு வாழ்த்து, பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. அஜித்குமார் நலமுடன் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.