ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கொரானோ தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் புதிய படங்களின் வெளியீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டதால் புதிய படங்கள் சில நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின.
தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்பு தியேட்டர்களில் மட்டுமே படங்களைத் தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடி வெளியீடுகளும் தொடர்கிறது.
இந்த வாரம் பிப்ரவரி 26ம் தேதி அசோக் செல்வன், நித்யா மேனன், ரித்து வர்மா நடித்துள்ள 'தீனி' படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதற்கடுத்து ஆர்யா, சாயிஷா நடித்துள்ள 'டெடி' படம் மார்ச் 12ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படமும் ஓடிடி வெளியீடு என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
கடந்த வருடத்தில் புதிதாக எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்த ஓடிடி நிறுவனங்கள் அந்த சந்தாதாரர்களைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து புதிய படங்களை வாங்கி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சித்து வருகின்றன.
மீண்டும் திறக்கப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்களின் வருகை முன்பைப் போல இல்லாத காரணத்தால் சில தயாரிப்பாளர்களும் தியேட்டர் வெளியீடு பற்றி யோசித்து வருகிறார்களாம். இதனால், ஓடிடி தளங்கள் பயனடைகின்றன என்கிறார்கள்.
ஏப்ரல் மாதம்தான் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன்பிறகே தியேட்டர்களின் நிலைமை மாறும் என எதிர்பார்க்கிறார்கள்.