ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக 'பாம்பாட்டம்' எனும் படத்தை தயாரித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்படத்தில் ஜீவன் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.
தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இளவரசி நாகமதி எனும் கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.
வி.சி.வடிவுடையான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் இப்படம் 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை ஆகும். முதல் கட்டப்படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது.
இதில், 500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளனர். இதற்காக குதிரைகளும் குதிரை பயிற்சியாளர்களையும் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.