வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை |

பா.ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்து கடந்த 2016ம் வருடம் வெளிவந்த படம் 'கபாலி'. அப்படத்தில் அருண்ராஜா காமராஜ் இயற்றி, பாடிய 'நெருப்புடா' பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. அப்பாடல் தற்போது 50 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த படங்களில் 'பேட்ட' படத்தில் இடம் பெற்ற 'மரண மாஸ்' பாடல் தான் அவர் நடித்த படங்களிலேயே அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள பாடலாக உள்ளது. அப்பாடல் 163 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ரஜினிகாந்தின் பிரம்மாண்டப் படமான '2.0' படத்தின் பாடல்கள் கூட பெரிய அளவில் பார்வைகளைப் பெறவில்லை. ஆனால், 'பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' , 'கபாலி' படத்தின் 'நெருப்புடா' ஆகிய பாடல்கள்தான் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து 'தர்பார்' படத்தின் 'சும்மா கிழி' பாடல் 50 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் யு டியூபில் 'மாரி' படப் பாடலான 'ரௌடி பேபி' பாடல் 107 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது.




