மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி 25வது நாளை தொட்டு விட்டது. இந்தப்படம் ரிலீசான சமயத்திலேயே கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடியதாக இருந்தது. அதனால் அதற்கு மேல் சேர்க்க முடியாததென படத்தின் முக்கியமான சில காட்சிகளை நீக்கிவிட்டார்கள். அப்படி நீக்கப்பட்ட காட்சி ஒன்றை நேற்று வெளியிட்டது அமேசான் பிரைம் நிறுவனம்.
அதில் சக மாணவர்கள் இருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார் மாணவி கவுரி கிஷன். இந்தவிஷயத்தில் பேராசிரியரான விஜய் அதிரடியாக இறங்கி சம்பந்தப்பட்ட மாணவர்களை அடித்து உதைத்து, கவுரி கிஷனுக்கு நீதி பெற்று தருவது போல காட்சி இருந்தது. மேலும் பெண்கள் அணியும் உடைகளை வைத்து அவர்களது கேரக்டரை தீர்மானிக்க கூடது என்கிற வசனமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு விஜய் ரசிகர்களிடமும் சோஷியல் மீடியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் பின்னணி பாடகி சின்மயி இந்த காட்சியை குறிப்பிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார். அதேசமயம் மீ டூவில் தான் குற்றம் சாட்டிய வைரமுத்து, ராதாரவி போன்றவர்களையும் மீண்டும் இந்த விஷயத்தில் இணைத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், :இதுபோன்ற காட்சியை இயக்குனர் எழுதியற்காக பெருமைப்படுகிறேன்.. பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவரையே, நீண்ட நாளைக்கு குற்றம் சாட்டுவது, என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.. அதுமட்டுமல்ல இந்த உலகில் உள்ள வைரமுத்துக்கள், ராதாரவிகள் ஆகியோரை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார் சின்மயி.