மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இன்றைய குட்டி வாண்டுகள் முதல் யூத்துகள் வரை கட்டிப்போட்டு வரும் வீடியோ கேம் மான்ஸ்டர் ஹண்டர். வேற்று கிரகத்தில் எதிரே வரும் ராட்சத மான்ஸ்டர்களை (அரக்கர்கள்) எதிர்கொண்டு அழிக்கும் வீரர்களின் கதையை கொண்டது. இந்த வீடியோ கேம் சினிமாவாகி. அது கொரோனாவால் விரட்டி அடிக்கப்பட்டது.
டெரர் ராணுவ பெண் அதிகாரி மிலா. தனது குழுவினருடன் ஒரு அசைன்மெண்டுக்காக காட்டுவழி பயணம் மேற்கொள்ளும்போது ஏற்பட்ட கொடூர ராட்ச புயலால் அடித்து செல்லப்பட்டு இந்த உலகத்துக்கு அப்பால் உள்ள இன்னொரு உலகத்தில் போய் விழுகிறார்கள். அங்கு கொடூரமான மாஸ்செஸ்டர்கள் வாழ்கிறார்கள்.
அந்த மான்ஸ்டர்களுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் அவற்றுக்கு காது மட்டும் கேட்கும். சத்தம் கேட்டு தான் அவைகள் செயல்படும். இந்த ஒரு பலவீனத்தை வைத்துக் கொண்டு மான்ஸ்டர்களை வென்று மிலா எப்படி தன் குழுவினருடன் உலகம் திரும்புகிறார் என்பதுதான் கதை.
ஓங்க் பாக் படங்கள் மூலம் புகழ்பெற்ற தாய்லாந்து நடிகர் டோனி ஜா ஹீரோவாக நடித்திருந்தார். ரெசிடெண்ட் ஈவில் படங்களை இயக்கிய பால் ஆண்டர்சன் இயக்கி உள்ளார். அதில் நடித்த மிலா ஜோவிச்தான் இதிலும் ஹீரோயின்.
கனடா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் கடந்த மாதம் வெளிவந்தது. ஆனால் கொரோனா கால ஊரடங்கால் படம் பெரும் தோல்வியை தழுவியது. அதோடு படமும் வீடியோ கேம் போன்றே இருப்பதாகவும், படத்தில் கதை என்று பெரிதாக இல்லை என்பதாலும் படம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் ஒரு சில தியேட்டர்களில் வெளியாகி ஒரு சில நாட்களிலேயே வெளியேறிவிட்டது. மான்ஸ்டர் அனுபவத்தால்தான் ஜேம்ஸ்பாண்ட் உள்ளிட்ட பல படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிப்போட்டிருக்கின்றன.